?கேரளாவில் மீண்டும் மழை?

public

கேரளாவில் மீண்டும் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நான்கு மாவட்டங்களில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில முதல்வர் அலுவலகம் நேற்று (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் பெய்த பெருமழையால், அம்மாநிலமே நிலைகுலைந்து போனது. தற்போது, கேரளா தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அங்கு பெருமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால், அம்மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா, இடுக்கி, வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டாம் நிலை எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் 25, 26ஆம் தேதிகளில் பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 64.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது கேரள முதல்வர் அலுவலகம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அம்மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *