)கிட்ஸ் கார்னர்!

public

குச்சியை வைத்து ஆடும் த்ரில் விளையாட்டு!

குச்சியை வெச்சு மற்றுமொரு சுவாரஸ்யமான விளையாட்டு. ஆனா, சாதாரண குச்சில விளையாட முடியாது. அம்பால் குச்சிலதான் விளையாடனும். அதுனாலயே இந்த விளையாட்டுக்குப் பேரு அம்பால்.

**அம்பால் விளையாட்டு**

அம்பால் குச்சிங்கிறது, எண் 7 போன்ற வடிவத்துல இருக்கிற குச்சி. அம்பால் குச்சி கிடைக்கலைன்னா நுனியில கொஞ்சம் வளைஞ்ச குச்சியை வெச்சி ஆடலாம். ஹாக்கி மட்டை பாத்துருக்கீங்க இல்லயா? கிட்டத்தட்ட அதே மாதிரி!

இரு அணிகளாக பிரிஞ்சு, ஒரு அணி வெளிய நிக்கணும். அந்த அணி சார்புல ஒருவர் அம்பால் குச்சியை உயர்த்தி பிடிச்சு பின்னாடி திரும்பி நின்னுக்கணும். எதிரணியிலிருந்து ஒருத்தர் அவர் கையில இருக்கும் குச்சிய தூர தள்ளிவிடணும்.

கீழே விழுந்த குச்சியை மத்தவங்க தள்ளிக்கிட்டே போகணும். தன்னோட குச்சியை யார் தள்ளிட்டுபோறாங்களோ, அவங்களை தொட்டு ஆட்டமிழக்க செய்யணும். அப்படி அவுட் ஆனவங்க அந்தக் குச்சியை உயர்த்திப் பிடிச்சு நிக்க, அடுத்த அணி அதே மாதிரி தள்ளிவிட்டு ஆட்டங்காட்டும்.

ஒருவேளை குச்சி அவர் கையில கிடச்சா, அதை ஆரம்பிச்ச இடத்துக்கே கொண்டு வந்து சேக்கணும். அப்படி சேர்த்துட்டா அவங்க அணி ஜெயிச்சதா அர்த்தம்.

குச்சியை தள்ளிட்டு போறவங்க பக்கத்துல போகும்போது அவங்க அதை இன்னொருத்தருக்கு பாஸ் பண்ணிடுவாங்க. அப்படிக் குச்சியைத் தரையில தள்ளிட்டு போறவங்களை அவுட் ஆக்குறதே பெரிய சிரமம். அதைவிட சிரமம், எதிரணி கையில சிக்காம தள்ளிவிட்ட குச்சியை திரும்ப ஆரம்பிச்ச இடத்துக்கே கொண்டு வந்து சேக்குறது.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, லாவகம்னு எண்ணற்ற செயல்பாடுகளை ஒரே விளையாட்டுல கத்துக்கலாம்.

த்ரில்லான விளையாட்டு. ஆடிப்பாருங்க! ஆட்டத்துக்கு அடிமையாகிடுவீங்க!

**- நரேஷ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *