>காலிறுதியில் ஏமாற்றம்!

public

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரனாய் வெளியேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனாவ்- சிக்கிரெட்டி ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2வது சுற்றில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் 21-16, 21-13 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் வெற்றி பெற்றார். சாய்னாவுடன் 8வது முறையாக மோதிய கரோலினா மரின் அதில் பெற்ற 4வது வெற்றி இதுவாகும். இந்த தோல்வியினால் சாய்னா இந்த தொடரை விட்டு வெளியேறினார்.

இதன் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் ஒகுஹராவோடு மோதினார். இதில் சிந்து 18-21, 8-21 என ஒகுஹராவிடம் [தோல்வியடைந்து](https://www.minnambalam.com/k/2017/09/22/1506018608) தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் , ஹாங்காங்கின் ஹூ யுன்னை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் ஹூ யுன்னை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டரை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங் மோதினார். இதில் பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று, தொடரிலிருந்து வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ்- சிக்கிரெட்டி ஜோடி காலிறுதியில் தென் கொரியாவின் சே செயுங்- கிம்ஹானா ஜோடியை 21-18, 9- 21, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. முன்னணி வீரர்கள் அனைவரும் காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியுள்ளதால், இந்தியாவின் கோப்பைக் கனவு பிரனாவ்- சிக்கி ரெட்டி ஜோடியை மட்டுமே நம்பியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *