ஐ.பி.எல். விளம்பரம்: மொபைல் நிறுவனங்கள் ஆதிக்கம்!

public

இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகளின் போது விளம்பரங்கள் ஒளிபரப்புதலில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பத்தாவது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் தங்களது விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக பல்வேறு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போடுவது வழக்கம். இதனால் தங்களது பிராண்டுகளை மக்களிடையே பிரபலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் தற்போதைய ஐ.பி.எல். சீசனில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், நெட்வொர்க் நிறுவனங்களும் அதிகளவில் செலவழித்து தங்களது விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக TAM Media Research நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 5 முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெற்ற 15 போட்டிகளில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்து, ஒட்டுமொத்த விளம்பரங்களில் சுமார் 32 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிலேயே ’ஆப்போ’ மற்றும் ’விவோ’ ஆகிய இரு சீன நிறுவனங்கள் மட்டும் விளபம்பரப்படுத்துதலில் 21 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளன. தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களில் வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து விளம்பரப்படுத்துதலில் 12 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளன.

விரிவாகப் பார்த்தோமேயானால், விவோ மொபைல் 9 சதவிகிதமும், ஆப்போ இந்தியா 8 சதவிகிதமும், வோடஃபோன் 6.3 சதவிகிதமும், அமேசான் இந்தியா 6.1 சதவிகிதமும், ரிலையன்ஸ் ஜியோ 5.6 சதவிகிதமும் விளம்பரப் பங்குகளைக் கொண்டுள்ளன. பிரிவு வாரியாக, மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவிகிதமும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 12 சதவிகிதமும், ஏர் கண்டிசனர் நிறுவனங்கள் 7 சதவிகிதமும், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் 6 சதவிகிதமும், கார்/ஜீப் நிறுவனங்கள் 5 சதவிகிதப் பங்களிப்பையும் கொண்டுள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *