எல்லா டிக்கெட்டுக்கும் தட்டுப்பாடுதான்: அப்டேட் குமாரு

public

வரும் தம்பி ஆனா வராதுங்குற அளவுல இருந்து, வந்தா கரெக்டா அடிக்கணும்ங்குற அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைஞ்சுருக்கு தம்பின்னு ஒரு பெரியவர் அவரோட தலைவரை பத்தி பெருமையா பேசிட்டு இருந்தாரு. அப்படியே பேச்சுவாக்குல டிக்கெட் கிடைக்குமான்னு கேட்டார். தீபாவளிக்கு ஊருக்கு போறதுக்கு கேட்குறாரு போலன்னு நினைச்சுகிட்டு, இப்போ எல்லாம் புக் ஆகிருக்குமே ஐயான்னு ரொம்ப பவ்வியமா சொன்னேன். ஓப்பன் பண்ணிட்டாங்களான்னு ஒரு ஷாக் கொடுத்தார். ஏன் இவ்ளோ ‘ஜர்க்’ஆகிறாருன்னு என்ன டிக்கெட்டுன்னு கேட்டேன். 2.O டிக்கெட் தான்னு சொல்லும் போது அவர் முகத்தை பார்க்கனுமே, அய்யோ…அப்படி ஒரு சிலிர்ப்பு. இன்னைக்கு தானே ட்ரெய்லர் ரிலீஸாகியிருக்கு மாச கடைசில தான படம் வருது, பொறுமையா இருங்க இன்னும் நாள் இருக்குன்னு சொன்னேன். அப்ப தான் நிம்மதியா மூச்சு விட்டார். இன்னும் பத்து வருசம் கழிச்சு கூட கரெக்டா அடிக்கலாம். அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கு, சரி அப்டேட்டை பாருங்க.

**@Kozhiyaar**

கதறி அழ வேண்டிய தருணத்தை, குறுநகையுடன் கடக்க பழகுவதற்கே பக்குவம் என்று பெயர்!!!

**@rahimgazali**

20 தொகுதிகளில் 8ல் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் – முதல்வர் பழனிசாமி

எதிர்க்கட்சியில் ஜெயிச்சு வருபவர்களில் பத்து பேரை எதாவது காரணம் சொல்லி தகுதி நீக்கம் செஞ்சுட்டா போச்சு. ஆட்சியை தக்க வச்சுக்கலாம்.

**வெ. பூபதி**

கஸ்டமர்களின் நாக்கைவிட, மூக்கை முதலில் திருப்திபடுத்திட்டா போதும்னு ஹோட்டல்காரங்க தெரிஞ்சுவச்சிருக்காங்க!

**@Aruns212**

உள்ளே திறக்க வேண்டுமா? வெளியே திறக்க வேண்டுமா? என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாலேயே ‘கேட்’டு என்று சொல்கிறோம் போல.

**@Thaadikkaran**

பண்டிகை செலவுக்கு கடன் தருபவர், கடன் பெற்றவர் மனதில் பட்டேல் சிலையைவிட உயர்ந்தவராகவே இருப்பார்..!

**@Annaiinpillai**

நாம் யார் என்று தெரிவதற்கு நம் முகம் பார்க்கும் கண்ணாடியை விட நம் மனம் பார்க்கும் மனச்சாட்சியே நமக்கான சிறந்த கண்ணாடி!

**@shivaas_twitz**

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து 96 நாட்கள் கூட ஆகாத… ’96’!

**@kaditham_ofcl**

மகளின் ஒவ்வொரு வாய் உணவிற்கு இடையில் ஒரு கதையோ, ஒரு கவனயீர்ப்போ, ஒரு கேள்வி-பதிலோ, ஒரு அதிசயமோ, ஒரு ஆச்சரியமோ நிகழ வேண்டியிருக்கிறது..

நிகழ்த்துகிறேன்.

கடவுளாக என்னை உணரச்செய்யும் அவளுலகம்..

**@CreativeTwitz**

சம்பாதிக்க உருப்படியான ஐடியா கேட்டா, ஒருத்தரும் சொல்றதில்ல. செலவு பண்ண ஐடியா கேட்டா, அருவி மாதிரி கொட்டுவாங்க. டிஸைன் அப்படி!

**@Rajtalk09**

அப்பாடா ஒரு மாதம் இந்த அமொன்ட் வச்சு ஓட்டிரலாம்’னு நினைத்து வெளிநாட்டிலிருந்து வந்த நண்பனை இரண்டு நாளில் பிச்சைக்காரன் ஆக்கிவிடுகிறது….

-தீபாவளி விலையேற்றம்

**@ajmalnks**

2.0 படத்தில் இருந்து பாதியிலேயே விலகலாம்ன்னு இருந்தேன் @ ரஜினிகாந்த்

2.0 க்கு நடித்த காலத்துல எக்ஸ்ட்ரா நாலுபடம் நடிச்சு வாடகை பாக்கியை செட்டில் பண்ணியிருக்கலாங்கிற ஆதங்கத்தில சொல்றாரு போல.

**@rahimgazali**

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவது தமிழகத்திற்கு நல்லது! – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆனா உங்க கட்சிக்கு நல்லதில்லையே..?!

**@nandhu_twitts**

கம்பி மத்தாப்பு போல சில நிமிடங்களே வர்ணஜாலமாய் இருக்கிறது வாழ்க்கை..!!

**@Kannan_Twitz**

என்னதான் கை கழுவ சலிச்சிக்கிட்டு ஸ்பூன்ல சாப்பிட்டாலும் இடையில எழும்புத்துண்ட அனுப்பி கைகொட்டி சிரிக்கும் வாழ்க்கை.

**@rahimgazali**

ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகர்”

2.O ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு.

ஏன்னா… ரஜினி படத்துக்குத்தான் இப்ப இசை அமைச்சிக்கிட்டு இருக்காரு.

**@வெ. பூபதி**

இயல்பை மறந்து எந்நேரமும் உஷாரா இருக்க முயற்சிப்பவர்களை பார்க்க பரிதாபமாக இருக்கும்!

**@RajeshNovelist**

இப்போதே பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு கிராம் பொங்கல் எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டால்

பரவாயில்லை.

**@Thaadikkaran**

எல்லாரும் சாப்பிடட்டும்னு அதிகமா வாங்கிட்டு போனா, எனக்கு வேணான்னு உனக்கு வேணான்னு சொல்றதும், அளவா வாங்கிட்டு போனா அடிச்சிக்கிட்டு கிடக்குறதும் டிசைன்..!

**@parveenyunus**

வாழ்க்கையில் எத்தனையோ இடர்களை தாண்டி வந்து விடும் நம்மால், பண்டிகை காலங்களில் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலை தாண்டி வரமுடிவதில்லை.

**@rahimgazali**

தொழில் புரிவதற்கு உகந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா முன்னேற்றம்! – அருண் ஜெட்லி

எல்லாம் பட்டேல் சிலை வைத்த நேரம்தான்னு சொல்லுங்க..!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *