�அம்மா வாஷிங் மெஷின் திட்டம், கல்விக் கடன் ரத்து, இலவச சூரிய அடுப்பு: அதிமுக வாக்குறுதி!

Published On:

| By Balaji

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 14) மாலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

* அனைத்து இல்லங்களுக்கும் இலவச சூரிய அடுப்பு

*கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி.பி டேட்டா,

* அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு

* வீட்டில் ஒருவருக்கு அரசு பணி.. .

*முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு

. * கேபிள் இலவசம்

* தமிழ் கட்டாயப்பாடம்

* கல்விக்கடன் தள்ளுபடி..

*அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு

*நம்மாழ்வார் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்

* 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும்.,

*பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.,

*மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500 ரூபாயாக உயர்வு

**அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

* மாதந்தோறும் மின் கட்டணம் நிர்ணயம்

* தனியார் பள்ளிஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்யும்

*அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை

என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share