Xஉயர்கிறது சுங்கச் சாவடி கட்டணம்!

politics

சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், “நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்றும் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கி.மீ. தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றை எல்லாம் மூடுவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும்” என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில் சென்னையை அடுத்துள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயரும் என்று மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இங்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சுங்க கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மாநகர எல்லைக்குள் வரும் வானகரம், பரனூர், சூரப்பட்டு, சென்ன சமுத்திரம், நெமிலி ஆகிய ஐந்து சுங்கச் சாவடிகளை அகற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த நிலையில், வானரகம் சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *