மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

சமூக வலைதளங்களில் நம்பர் 1 நடிகை!

சமூக வலைதளங்களில் நம்பர் 1 நடிகை!

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இந்திய நடிகையாக தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘சோஷியல் மீடியா சம்மிட் & அவார்ட்’ நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நவம்பர் 18 – 19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆந்திராவின் தலைநகராக உருவாகிவரும் அமராவதி நகரை பிரபலப்படுத்தும் விதத்தில் ஆந்திரா டூரிசம் இந்த நிகழ்வை இந்த ஆண்டு ஒருங்கிணைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழில் முனைவோர், பத்திரிகையாளர்கள் / பிளாக்கர்ஸ், பிராண்ட் மேனேஜர், மாணவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு பிரிவுகளில் 30 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தவகையில், மிகவும் பிரபலமான இந்திய நடிகைக்கான விருதுக்கு தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் தென்னிந்திய நடிகராக ராணா டக்குபதியும், ‘கொலவெறி டி’ பாடல் மூலம் இசையால் பரபரப்பை ஏற்படுத்தியதற்காக இசையமைப்பாளர் அனிருத்தும், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது சமூக அக்கறையுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தியதற்காக ஆர்ஜே பாலாஜியும் விருது பெற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு தற்போது சோஷியல் மீடியா சம்மிட் & அவார்ட் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon