|14 கோடி டூ 330 கோடி: முதல்வரின் அடேங்கப்பா சொத்து !

public

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்துமதிப்பு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த 14 கோடி ரூபாயைவிட பல மடங்கு அதிகரித்து ரூ. 330 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நியமன உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நாரா லோகேஷ் தற்போது, அம்மாநில பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியமன உறுப்பினருக்கான தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்த பிரமான் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு ரூ.329.52 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ரூ.273.84 கோடி அசையும் சொத்துகள், ரூ.56.52 கோடி அசையா சொத்துகள். தற்போது தேர்தல் ஆணையத்திடம் லோகேஷ் அளித்துள்ள சொத்துமதிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பைவிட பல மடங்கு அதிகமாகும். ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, கடந்த அக்டோபர் மாதம் வெளியான தகவலில் லோகேஷ் சொத்துமதிப்பு ரூ.14.50 கோடிதான் இருந்தது. அதோடு, சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களின் மொத்த சொத்துமதிப்பே ரூ.74 கோடிதான். ஆனால் தற்போது லோகேஷின் சொத்துமதிப்பு 5 மாதங்களில் 20 மடங்காக உயர்ந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லோகேஷ், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, நான் எனது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளேன். 5 மாதங்களுக்குமுன்பு பழைய மதிப்பில் இருந்தது எவ்வளவு என்றும் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு கடந்த சில வருடங்களாகவே தங்களது குடும்பச் சொத்துமதிப்பை மக்களுக்கு வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *