வெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலக காரணம் இதுதான்!

entertainment

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக உருமாறியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இயக்குநராக மட்டுமல்லாமல், க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலமாக காக்காமுட்டை, விசாரணை, மிக மிக அவசரம் மாதிரியான சிறந்த படைப்புகளையும் கொடுத்துவருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்கில் கடைசி ரிலீஸானது தனுஷ் நடிப்பில் உருவான அசுரன். அதுபோல, ஓடிடியில் பிரகாஷ்ராஜ், சாய்பல்லவி நடித்த ‘ஓர் இரவு’ எனும் கதையை நெட்ஃபிளிக்ஸ் ஆந்தாலஜியான ‘பாவக்கதைகள்’ சீரிஸில் இயக்கியிருந்தார்.

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் விரைவில் உருவாக இருக்கிறது. இப்படம் தாமதமாவதால், சூரியை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன்.

சூரியும், பாரதிராஜாவும் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்க சத்தியமங்கலம் காடுகளில் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. ஜெயமோகன் எழுதிய துணைவன் கதையை மையமாகக் கொண்டு தான் இந்தப் படத்தை குறுகிய காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றி..

இந்நிலையில், பாரதிராஜா படத்திலிருந்து விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகிவருகிறது. இப்போதைக்கு தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல் நடிக்கும் நடிகர்களில் அதிக சம்பளம் பெறும் நடிகர் பாரதிராஜா. ஒவ்வொரு படத்திலும் இவரின் சம்பளம் 1 கோடி தொட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் ஏன் வெற்றிமாறன் படத்திலிருந்து விலகினார் என்று விசாரித்தால், புதிய செய்தி கிடைக்கிறது.

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் செட் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. முழு படப்பிடிப்பும் அங்கு தான் திட்டமிட்டிருக்கிறார்கள். காட்டுப் பகுதியை மையமான கதை என்பதால், எப்படியும் எட்டு மணிநேர படப்பிடிப்பிலும் மேல் சட்டை இல்லாமல் நடிக்கும் காட்சிகள் இருக்கும். ஆக, அங்கு பனி பொழுவு அதிகமாக இருக்கும் காரணத்தினால் படப்பிடிப்பிலிருந்து விலகிவிட்டாராம் இயக்குநர் பாரதிராஜா.

பொதுவாக, சம்பளம் குறைவாக இருக்கிறது அல்லது கால்ஷீட் பிரச்னை காரணமாக மட்டுமே படத்திலிருந்து விலகுவதெல்லாம் நடக்கும். இங்கு கொஞ்சம் வித்தியாசமாக உடல்நிலையை மனதில் கொண்டு, குளிர் காரணமாக படப்பிடிப்பிலிருந்து விலகியிருக்கிறாராம் பாரதிராஜா.

தற்பொழுது, பாரதிராஜாவுக்குப் பதில் கிஷோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. ஏற்கெனவே வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களில் கிஷோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதினி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *