மேலும் 25 லட்சம்: திரையுலகை வியக்க வைக்கும் லாரன்ஸ்

entertainment

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் லாரன்ஸ் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி மேலும் 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து போராடி வருகிறது. அரசுக்கு கைகொடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், 50 லட்ச ரூபாய் பிரதமரின் நிவாரண நிதிக்கும், 50 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளார். மேலும் 50 லட்சத்தை ஃபெப்சி தொழிலாளர் சங்கத்துக்கும், 50 லட்சம் நடன இயக்குநர்கள் சங்கத்துக்கும் வழங்கியுள்ளார். அத்துடன் தான் பிறந்த ராயபுரத்தில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்காக 75 லட்சம் ரூபாயும், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி 25 லட்ச ரூபாயும் என மொத்தம் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இவரின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கோடிகளில் ஊதியம் பெற்றும் இதுவரை நிதி உதவிகள் செய்ய முன்வராத சில முன்னணி நடிகர்களைப் பலரும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்காகவும் லாரன்ஸ் மேலும் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி இருப்பதாகத் தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “திரு.ராகவா லாரன்ஸ் அவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக் கூற தொலைபேசியில் அழைத்து இருந்தேன், அப்போது அவர் பேசும்போது அண்ணா நம் வீட்டுக்கு வாங்கிவரும் அத்தியாவசியப் பொருட்களே 12 மணி நேரத்தில் வெளியில் வைக்கும் இந்த நேரத்தில் நம் வீட்டுக் குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும் எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளருக்கு அடுத்து உதவி செய்ய விரும்புவதாகவும், தாங்கள் எனக்குக் கொடுக்கவிருக்கும் சம்பள தொகையில் 25 லட்சம் ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் சென்றடைய வழி செய்யுமாறு கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவா லாரன்ஸுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *