eஒன்பிளஸ்: என்ன செய்ய காத்திருக்கிறது?

Published On:

| By Balaji

ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோனுக்கு புகழ்பெற்றது போலவே, மேலும் இரண்டு விஷயங்களுக்கு புகழ்பெற்றது. ஒன்று போட்டி கம்பெனிகளுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருவது. மற்றொன்று, ஒன்பிளஸ் எப்படியும் கெத்து காட்டிடும் என்ற நம்பிக்கையுடன் அதன் யூசர்களை நிம்மதியாக உறங்கவைப்பது. எதிர்நோக்கிவரும் CES 2020 நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் செய்யப்போவது குறித்து இப்படிப்பட்ட மனநிலை தான் நிலவுகிறது.

CES 2020 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததில் அதிக தகவல்கள் இல்லை. நிகழ்வில் கலந்துகொள்ளும் சாதாரண அறிவிப்பு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது வெளியிட்டிருக்கும் சமூக வலைதள அறிவிப்பில் ‘தங்களது முதல் கான்செப்ட் ஸ்மார்ட்ஃபோன்’ பற்றி குறிப்பிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.

லாஸ் வெகாஸ் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் CES 2020 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது கான்செப்ட் ஸ்மார்ட்ஃபோன் சீரீஸில் முதல் மாடலை வெளியிடப்போகிறது. இதற்கு ‘கான்செப்ட் ஒன்’(Concept One) என்றே பெயர் வைத்திருக்கின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பில், “கான்செப்ட் ஸ்மார்ட்ஃபோன் சீரீஸில் இது முதல் ஸ்மார்ட்ஃபோன் என்பது அதன் பெயர் மூலமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது யூசர்களுக்கு மிக மென்மையான, வேகமான, கஷ்டமில்லாத வகையில் பயன்படுத்தக்கூடிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோனைக் கொடுப்பதற்கான முயற்சி. புதிய தொழில்நுட்பத்தையும், ஸ்மார்ட்ஃபோன் டிசைனில் மாற்று முயற்சியையும் இதில் ஒன்றிணைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறது.

ஒன்பிளஸ் தற்போதைக்கு உருவாக்கியிருக்கும் பில்டப் நன்றாகவே இருந்தாலும், இதற்கு முன்பு முன்னணி நிறுவனங்கள் வெளியிட்ட கான்செப்ட் ஃபோன்களில் பல சொதப்பியவை என்பதால், ஒன்பிளஸ் என்ன செய்கிறது எனப் பொருத்திருந்து பார்ப்போம். �,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share