வடிவேல் பாலாஜி குறித்து பதிவிட்ட புகழ்!

entertainment

’குக் வித் கோமாளி’ புகழ் மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகரும், பல குரல் கலைஞருமான வடிவேல் பாலாஜி கடந்த 2020 அன்று மறைந்தார். இவரது பிறந்தநாளான இன்று அவர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை புகழ் பகிர்ந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்க போவது யாரு’, ‘அது இது எது’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் இவர் பிரபலமானார். மேலும் இவரது மனைவி ஜோதிலக்‌ஷ்மியுடன் இவர் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகர் என்பதால் அவரை போலவே தன் தோற்றத்தை மாற்றி கொண்டதோடு தன் பெயரின் முன்னாலும் வடிவேலு பெயரை சேர்த்து கொண்டார்.

மதுரையை சேர்ந்தவரான வடிவேல் பாலாஜி, ‘முனி’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களிலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது எதிர்பாராத இழப்பு ரசிகர்களிடையேயும் சின்னத்திரை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொருளாதார பிரச்சனை காரணமாக இவருக்கு சரியான சிகிச்சை தர முடியவில்லை எனவும், இவருக்கு விஜய் டிவி உதவவில்லை எனவும் அந்த சமயத்தில் இவரது மரணம் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளுக்காக அவருடன் பயணித்த ‘குக் வித் கோமாளி’ புகழ் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், ‘மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள். இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா. மிஸ் யூ மாமா’ என உருக்கமாக பகிர்ந்துள்ளார் புகழ்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *