yகுக் வித் கோமாளி எலிமினேஷன்: சந்தோஷ் எமோஷனல்

entertainment

‘சமையல் என்னுடைய தொழில் கிடையாது. வைல்ட் கார்ட்டில் வந்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவேன்’ என ‘சார்பட்டா’ சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சிவாங்கி, மணிமேகலை, ஷரத், பாலா, சுனிதா என வழக்கமான கோமாளிகளோடு இந்த சீசனில் அந்தோணி தாசன், வித்யுலேகா, மனோபாலா, ரோஷினி, அம்மு அபிராமி, சார்பட்டா’ பட புகழ் சந்தோஷ் உள்ளிட்ட பலர் குக்காக களம் இறங்கினர்.

இதில் இந்த வார எலிமினேஷன் எபிசோட்டில் சந்தோஷ் வெளியேறி உள்ளார். இதனை அடுத்து ‘குக் வித் கோமாளி’ செட்டில் இருந்து தன்னுடைய அனுபவத்தையும் பயணத்தையும் பற்றி பேசி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நான் வெளியேறி உள்ளேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு நாள். சிறு வயதில் விடுமுறைக்காக ஊருக்கு சென்று திரும்பும் போது, ‘ஏன் அங்கிருந்து வருகிறோம்?’ என்ற எண்ணம் இருக்கும் இல்லையா? அப்படி தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், என்னால் யாரும் வெளியேறவில்லை என்பது மகிழ்ச்சி. மேலும் ஷரத்துக்கு நான் பரிசும் பெற்று தந்துள்ளேன் என்பதும் மகிழ்ச்சியான விஷயம்.

சமையல் என்னுடைய தொழில் கிடையாது. ஆனாலும், என்னால் முடிந்த அளவு சிறந்ததை தான் இங்கு கொடுத்துள்ளேன். ஒருவேளை, நான் வைல்ட் கார்ட்டில் அடுத்து உள்ளே வந்தாலும் இன்னும் சிறந்ததாக கொடுக்க முயல்கிறேன். ஆனால், அந்த சமயத்தில் படங்களில் பிஸியாக இருப்பேனா என தெரியாது. நிச்சயம் இந்த செட்டை மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பெருமை படுத்தும் விதமாக நிச்சயம் நிறைய நல்ல படங்களில் நடிப்பேன்’ என அந்த வீடியோவில் சந்தோஷ் பேசியுள்ளார்.

தற்போது நடிகை த்ரிஷாவின் புதிய படம் ஒன்றில் நடிக்க சந்தோஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *