kரொம்ம்ம்ம்ப நல்ல நாயகன்: அப்டேட் குமாரு

entertainment

இவரு அறிக்கை நாயகன்னு சொல்றாரு… அவரு ஊழல் நாயகன்னு சொல்றாரு… இப்படி மாத்தி மாத்தி பட்டம் கொடுத்துக்குறாங்க. இதையெல்லாம் டெய்லி கேட்டுக் கேட்டு சலிச்சுப் போன மக்களுக்கு என்ன பட்டம் கொடுக்குறது? எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோமே… ரொம்ம்ம்ப நல்ல நாயகன்னு நமக்கு நாமே பட்டம் கொடுத்துக்கலாமா?

நீங்க அப்டேட் பாருங்க.

**Siva_KS**

“புதிய பாராளுமன்றத்துக்கு அடிக்கல் மட்டுமே நடுவோம். கட்டடம் எதுவும் கட்ட மாட்டோம்” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி !

அப்படீன்னா இதுவும் மதுரை எய்ம்ஸ் மாதிரிதானா ?

**பர்வீன் யூனுஸ்**

இரவு பகல் பாராது அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது – முதல்வர் # டே நைட் மேட்ச் மாதிரி டே நைட் ஆட்சியா..?

**நாகராஜ சோழன் MA.MLA**

“ரஜினியுடன் கூட்டணி அமையலாம்”: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சார் இது உங்க கட்சி கருத்தா இல்லை உங்க சொந்த கருந்தானு அமைச்சர் ஜெயகுமார் கேக்க சொன்னார்…. 11 மணிக்கு பேட்டி குடுகணுமாம்…

**PrabuG**

ஆத்தான்னா கெட்ட வார்த்தையாம். ஆனா உன்னை கூப்பிட எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா…

**ℳsd↬இதயவன்↫**

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் ~ சுப்பிரமணியன் சுவாமி

நோட்டா இருக்கிறப்ப எப்படி தனித்து சாத்தியமாகும் கோபி?!!

**balebalu**

மரியாதையா சொல்லு ! நீ A டீமா B டீமா ?

அய்யோ , நான் புட்பால் டீம் ங்க ! விளையாட வந்துருக்கேன் !

**PrabuG**

எங்கெங்கெங்கேயோ போறார். புதுசு புதுசா கெட்டப் போடுறார். வித விதமா ஃபோட்டோ ஷூட் பண்ணுறார்.

கேட்டா பிரதமருங்குறார்…

**மயக்குநன்**

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!- நிர்மலா சீதாராமன்.

ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஃபாரீனுக்கு அனுப்பி வச்சிடுவீங்க… அதானே…?!

**ஷேக்பரித்**

தண்ணீரை லிட்டருக்கு ரூ .20 க்கு விற்க கூடிய தொழிலதிபர்!Face with rolling eyes

சிந்தியுங்கள்..

விவசாயிகளின் தானியம் அவன் கைகளில் கிடைத்தால்..

**கடைநிலை ஊழியன்**

எதுக்குனே அவன அடிக்குறீங்க ??

2020 காலண்டர் நீங்க தான் கொடுத்தீங்க.. காலேஜ் லீவு.. ரொம்ப ராசியா இருந்துச்சு..

2021 காலண்டரும் நீங்க தான் தரணும் கேக்குறான்..

**கோழியின் கிறுக்கல்!!**

நம் உறவு வட்டம் என்பது ‘ஐய்யயோ இன்னும் திருமணம் ஆகாமல் கஷட்ப்படுறானே’ என்று ஆரம்பித்து,

‘ஐய்யயோ கல்யாணம் பண்ணிட்டு கஷட்ப்படுறானே’ என்பதாய் “முடித்து” வைக்கிறது நம் வாழ்க்கையை!!

**-லாக் ஆஃப்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *