xஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் முதலிடம்!

entertainment

ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று நான்கு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
15ஆவது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று (ஏப்ரல் 14) 24ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட்) 12 ரன்களிலும் விஜய் ஷங்கர் 2 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா, அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் மில்லர், ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும், டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும் ஜோஸ் பட்லர் அதிரடி குறையவில்லை. குஜராத் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் குஜராத் அணி நான்கு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும் உள்ளது .
இன்று (ஏப்ரல் 15) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
**-ராஜ்**

..

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *