}வைல்ட் கார்டு எண்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன்

entertainment

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் லாஸ்லியா வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரம்யா பாண்டியன் உள்ளே வந்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிக்பாஸின் ஐந்து சீசன்களையும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் அல்டிமேட்டையும் அவரே தொகுத்து வழங்கினார். ஆனால், ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு தேதி ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து ஆறாவது சீசனில் திரும்ப வருவதாக கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

முப்பது நாட்கள் கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இப்போது நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸின் தீவிர ரசிகரான சிம்பு கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளே வந்தார். போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி அவர்களை உற்சாகப் படுத்தினார். மேலும், நிகழ்ச்சியில் அவருடைய முதல் நாள் என்பதாலும் அதற்கு சில நாட்களுக்கு முன் தான் வனிதா பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறியதாலும் சிம்புவின் முதல் வாரம் யாரையும் வெளியேற்றவில்லை.

மாற்றாக, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ‘கலக்க போவது யாரு?’ சதீஷ் ஆகிய இருவரை வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே அனுப்பி வைத்தது பிக்பாஸ் குழு. இந்த நிலையில் மேலும் ஒரு வைல்ட் கார்டு இருக்கும் என கடந்த வாரம் சிம்பு நிகழ்ச்சியில் சொல்லி விடை பெற்றார். தாடி பாலாஜியும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறினார்.

இந்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக லாஸ்லியா உள்ளே வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மூன்றாவது சீசனில், இலங்கையில் இருந்து செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா உள்ளே நுழைந்தார். பிறகு, யுவராஜ் சிங், சதீஷ் ஆகியோருடன் ‘நண்பேண்டா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இது தவிர, கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன் ஆகியோருடன் ‘கூகுள் குட்டப்பா’ படமும் இவரது கைவசம் உள்ளது. தர்ஷனும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் லாஸ்லியாவுடன் சக போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி வாசிப்பு பணியை விட்டுவிட்டு படங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த லாஸ்லியா இப்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழைய இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் பிக்பாஸ்ஸின் டேக்கான ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’-க்கு ஏற்ப நான்காவது சீசனில் இரண்டாவது ரன்னரப்பாக வந்த ரம்யா பாண்டியன் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறார்.

பிக்பாஸ் நான்காவது சீசன் முடிந்ததும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படத்தில் நடித்தார் ரம்யா. பின்பு சில படங்களில் ஒப்பந்தமானவர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டுக்குள் நுழைந்திருப்பது ரம்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *