uதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது!

public

மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரவுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு இருந்து வருகிறது. அனைத்து விதமான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக குறைந்துள்ள வருமானத்தை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

ஊரடங்கு பத்திரப் பதிவு அலுவலங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, இதனையே காரணமாக முன்னிறுத்தியது. அதாவது, தற்போதுள்ள இக்கட்டான சூழலில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதிநெருக்கடியை சமாளிக்க பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இன்று (மே 3) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட் வரி) 28 இலிருந்து 34 சதவிகிதமாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 20 லிருந்து 25 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3.25 ரூபாய் வரையும், டீசல் லிட்டருக்கு 2.50 வரையும் உயரவுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிதியை அதிகரிப்பதன் பொருட்டு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏற்கனவே பொதுமக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழும் என்று தெரிகிறது.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *