sவதந்தி பரப்புவோருக்கு தண்டனை: அரசு ஆலோசனை!

public

+

சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோருக்குக் கண்டிப்பாக தண்டனை வழங்க, இன்று (ஜூன் 11) மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளால் பல்வேறு சட்டஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்தில், ஜம்மு-காஷ்மீரில் பரவிய வதந்தியால், சிறுவர் முதல் இளைஞர்கள் வரை கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதுபோன்று, தமிழகத்தில் குழந்தைக் கடத்தல் குறித்து வதந்தி பரப்பியதால் பலர் உயிரிழந்தனர் மற்றும் சிலர் தாக்கப்பட்டனர். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அழிப்பது குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்நிலைக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், காஷ்மீர் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அதில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்தும், வதந்திகளைப் பரப்புவோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்வது, சமூக இணையதளச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து விரைவில் விஷமச் செய்திகளை அழிப்பது, விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *