Qராணுவ செலவு : இந்தியா 5-வது இடம்!

public

உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (CIPRI) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவ செலவு 8.5% அதிகரித்தது. ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது. அதன்படி, ராணுவத்துக்காக செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் 1.7% வரை ராணுவ செலவை அதிகரித்து 611 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது.சீனா 2-வது இடத்தில் உள்ளது. ராணுவத்துகாக சீனா 215 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது கடந்த காலங்களை விட 5.4% அதிகம். ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. தனது ராணுவத்துக்காக ரஷ்யா 5.9% வரை செலவை அதிகரித்துள்ளது. மொத்தமாக 69.2 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சவுதி அரேபியா 3-வது இடத்தில் இருந்து. தனது ராணுவ செலவை 30% வரை குறைத்துக் கொண்டதால் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தென்சீன கடலில் சீனா உள்ளிட்ட நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஆசிய பகுதியில் ராணுவ செலவினம் 4.6%வரை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் ஃபிரான்ஸ் 5வது இடத்திலும், இங்கிலாந்து 6வது இடத்திலும், ஜப்பான் 7வது இடத்திலும், ஜெர்மனி 8 வது இடத்திலும், தென் கொரியா 9 வது இடத்திலும், இத்தாலி 10 வது இடத்திலும், ஆஸ்திரேலியா பிரேசில் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது. முதல் 15 இடங்களில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. எனினும் அந்நாடு 9.93 பில்லியன் டாலர் ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் எண்ணெய் வருவாய் தொடர்புடைய பொருளாதாரப் பிரச்சினைகள், பல எண்ணெய் ஏற்றுமதி நாடுகளை இராணுவச் செலவினங்களை குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது என சிப்ரியின் ஆராய்ச்சியாளரான நான் டியான் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம், ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *