Qபாக்சைட் உற்பத்தி அதிகரிப்பு!

public

�இந்தியாவில் பாக்சைட் உற்பத்தி 49.4 மில்லியன் டன்னை எட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பாக்சைட் என்பது அலுமினியத் தாதுப் பொருளாகும். 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் 22.08 மில்லியன் டன் பாக்சைட் உற்பத்தி செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டில் 26.1 மில்லியன் டன் பாக்சைட் உற்பத்தி செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பி.எம்.ஐ. நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டில் பாக்சைட்டின் உற்பத்தி 49.4 மில்லியன் டன்னை எட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2021 ஆண்டு வரை பாக்சைட் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 17.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அலுமினியத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், பாக்சைட் உற்பத்தியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒடிசா மாநிலத்தில் பாக்சைட்டுக்கான சுரங்கப்பணிகள் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் மற்றும் விமான உற்பத்தி துறையில் பாக்சைட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாக்சைட் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *