pநான் யாருக்கும் எதிரி இல்லை: கே.எஸ்.அழகிரி

public

நான் யாருக்கும் எதிரி இல்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் கடந்த ஜூன் 26 ஆம் தேதி காங்கிரஸில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த கராத்தே தியாகராஜன், தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டு திமுக மீது கே.எஸ்.அழகிரி பழிபோடுகிறார். கோபண்ணா காங்கிரஸ் சொத்தை கொள்ளையடித்து வைத்திருக்கிறார். இதுபோன்ற ஆட்களைக் கூட வைத்திருக்கும் கே.எஸ். அழகிரி என்னை நீக்கியிருக்கிறார். என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, கராத்தே தியாகராஜன் பேச்சுக்குப் பதில் அளித்துப் பேசியிருந்தார். “ நான் யாருக்கும் எதிரி அல்ல. எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். கட்சித் தலைமை முடிவு செய்து கூட்டணி அமைத்த பிறகு, அதை வெற்றி பெறச் செய்ய உழைக்க வேண்டுமே தவிர, மாற்றுக் கருத்துச் சொல்வது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல். கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்கத்தான் செய்யும்.

அவர் தலைவர் பதவியைக் கேட்டிருக்கலாம். அதற்கு அவர் தகுதியானவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் தலைவர் பதவியைக் கேட்கவில்லை. தலைவர் பதவிக்காக நான் டெல்லி செல்லவில்லை. அதனால் அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸ் சொத்து அபகரிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, ”காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஒரு அறக்கட்டளையின் கீழ் இயக்கப்படுகிறது. அதை அபகரிக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. இதுவரை நான் அறக்கட்டளை கூட்டத்தைக் கூட்டவில்லை. இந்த அறக்கட்டளை எங்களது முதுபெரும் தலைவர் வோராவின் நேரடி பார்வையில் கண்காணிக்கப்படுகிறது. இது காமராஜர் சொத்து. இதை யாரையும் அபகரிக்க விடமாட்டோம்” என்றார்.

**

மேலும் படிக்க

**

**[போன் போட்ட தினகரன்; பேட்டி கொடுத்த பழனியப்பன்](https://minnambalam.com/k/2019/06/29/47)**

**[சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/06/29/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: ஸ்டாலின் தயக்கம்- நிஜப் பின்னணி சொன்ன எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/28/89)**

**[முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?](https://minnambalam.com/k/2019/06/28/88)**

**[இணையத்தை கலக்கும் அஜித் – யுவன் மேஜிக்!](https://minnambalam.com/k/2019/06/27/44)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *