fவெப் சீரிஸில் களமிறங்கும் சித்தார்த்

public

I

சித்தார்த் அடுத்ததாக புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குநரான தீபா மேக்தா வித்தியாசமான கதைகளை படமாக்கும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் அடுத்ததாக நெட் பிளிக்ஸ் தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடரில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் ஏற்கெனவே தீபா மேக்தா இயக்கிய மிட் நைட்ஸ் சில்ரன் படத்தில் நடித்திருந்தார்.

திரையரங்குகளைத் தவிர்த்து அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்நிலையில் தீபா மேக்தா இயக்கும் புதிய தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தொடரில் காலா படம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஹுமா குரேஷியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

மலையாளத்தில் கம்மார சம்பவம் படத்தில் நடித்த சித்தார்த் தற்போது இயக்குநர் சசி இயக்கும் புதிய படம், கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கும் சைத்தான் கே பச்சா, சாய் சேகர் இயக்கும் படம் ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்துவருகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *