இரு நாடுகளை உறுப்பினர்களாக இணைக்க நேட்டோ ஆலோசனை

public

ஸ்வீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளையும் நேட்டோ அமைப்பில் உறுப்பினர் நாடுகளாக இணைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பித்த நேட்டோ உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இந்நிலையில் அந்த போர் 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் நாடு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நேட்டோவில் அமைப்பில் இணைய விண்ணப்பம் செய்தது. அதன்படி ஒரு நாடு நேட்டோ அமைப்பில் விண்ணப்பம் செய்த முதல் உறுப்பினர் நாடு ஆகும் வரை சில வருட காலங்கள் பிடிக்கும். ஆகையால் சமீபத்தில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் நாட்டுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்வீடனையும், பின்லாந்தையும் உறுப்பினர்கள் நாடுகளாக நேட்டோ அமைப்பில் இணைய ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது நேட்டோ கூட்டணி நாடுகளின் வலிமையை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நேட்டோ கூட்டத்தில் இந்த இரு நாடுகளும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த இரு நாடுகளுக்கும் எதிரான நிலையை தெரிவித்து வந்த துருக்கி நாடு தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டது. மேலும் ஸ்வீடன், பின்லாந்து, துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே கையெழுத்து ஒன்றும் ஒப்பந்தமானது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த ராணுவங்களை கொண்ட வலிமையான ஜனநாயக நாடுகள். அவர்கள் நேட்டோவின் உறுப்பினர்கள் ஆவது கூட்டு பாதுகாப்பின் வலிமையை மேம்படுத்தும். இதற்காக சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *