மாணவன் பலி: வேன் ஓட்டுநருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

public

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த வழக்கில் வேன் ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞான சக்தி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலெட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீது கொலையாகாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பள்ளி ஊழியர் ஞானசக்தியும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஓட்டுநர் பூங்காவனம், பள்ளி ஊழியர் ஞானசக்தி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேன் ஓட்டுநருக்கு ஒருபக்க காது கேட்காது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.பூங்காவனம் மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்று கடந்த ஆறு வருடங்களாக இந்த பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
**அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை**
இந்த சம்பவத்தையடுத்து, பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும்,அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றக்கூடாது.

பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் முறையாக பராமரித்து உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *