qரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்!

public

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து விமானம் மற்றும் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியிலிருந்து கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விசைபடகுகள் மூலமாக கடத்தப்படுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையிலும், போதைப்பொருள் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார், நேற்றிரவு வேம்பார் கடற்கரையிலிருந்து 5 கடல்மைல் தொலைவில் கடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒரு நாட்டு படகை பார்த்த போலீசார், அந்த படகை பின்தொடர்ந்து சென்றனர். போலீசாரைப் பார்த்ததும் அந்த படகில் உள்ளவர்கள் வேகமாக படகை கடலுக்குள் செலுத்தியுள்ளனர். இருப்பினும் போலீசார் விரட்டிச் சென்று படகை சுற்றி வளைத்து அவர்களை பிடித்தனர்.

படகில் சோதனையிட்டபோது, 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி என்பதும், இதை இலங்கைக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கடத்தல் கும்பலுக்கு தலைமையாக இருந்த கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த இருதயவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கிங்கப்பன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சிப்பிகுளத்தினை சேர்ந்த சைமன் ஆகிய எட்டுப் பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 10 கிலோ போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுபடகு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *