’கலைஞர் எழுதுகோல் விருது’: தேர்வுக் குழு அமைப்பு!

public

கலைஞர் எழுதுகோல் விருதுக்குத் தகுதியான விருதாளரைத் தேர்வுசெய்ய தேர்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம் , எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலைஞர் எழுதுகோல் விருதுக்குத் தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, விருதாளரைத் தேர்வுசெய்ய தேர்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில்,”விருது தேர்வுக் குழுவின் தலைவராக பேராசிரியர் அருணன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம் முனைவர்கள் பர்வீன் சுல்தானா, அரங்க மல்லிகா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் உறுப்பினர் செயலராக மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக் குழு மாற்றி அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *