:வீடு தேடி வரும் டீசல்!

public

இன்றைய நவீன தொழில்நுட்பம் வீட்டிலிருந்தபடியே அனைத்துப் பொருட்களையும் வீட்டுக்கு வரவழைக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துவிட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், டீசலை டோர் டெலிவரி செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

3.5 கோடி பேர் நாள்தோறும் பெட்ரோல் பங்க்குகளுக்கு வருகின்றனர். இதன் மூலம், பெட்ரோல் பங்க்குகளில், ஆண்டு தோறும், 2,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி, முன்பதிவு செய்யும் அடிப்படையில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பெட்ரோலிய பொருட்களை டெலிவரி செய்யும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டுவிட்டரில் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

நாட்டின் முதல் முறையாக வீட்டு வாசலில் டீசல் வழங்கப்படும் நகரமாக பெங்களூரு மாறியுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, டீசல் டெலிவரிக்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி பெற்று ஆசிஷ் குமார் குப்தா எனும் முன்னாள் ஐஐடி மாணவர், கடந்த 15 ஆம் தேதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். “மை பெட்ரோல் பம்ப்” என்ற மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே வந்து டீசல் விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து ஆசிஷ் குமார் குப்தா கூறுகையில், இந்த திட்டம் 3 டெலிவரி வாகனங்களுடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வாகனமும் 950 லிட்டர் கொள்ளளவு கொண்டது.குறைந்தபட்சம் 20 லிட்டரிலிருந்து அதிகபட்சம் 100 லிட்டர் வரை,வாங்கும்போது, ஒரு முறை விநியோக கட்டணமாக ரூ.99 வரை செலுத்த வேண்டும். 100 லிட்டருக்கு மேல் வாங்கும்போது, டீசல் விலை மற்றும் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் கொடுக்க வேண்டும்.

பெட்ரோல், பைக்குகள் மற்றும் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் டீசல், பள்ளிப் பேருந்துகள், ஜெனரேட்டர்கள், தொழிற்சாலைகள்,பெரிய வாகனங்கள் மற்றும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 77 மில்லியன் மெட்ரிக் டன் டீசல் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 22 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் டீசலை வாங்கி சேமித்து வைப்பதில்லை. வாடிக்கையாளர் ஆர்டர் செய்தவுடன், பெட்ரோல் பங்க்குக்கு சென்று டீசலை வாங்கி வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்படும்.

விரைவில், இதேபோல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *