|பிரிட்டன் புதிய பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்

public

பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று கனசர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போரிஸ் ஜான்சன் அந்நாட்டின் புதிய பிரதமர் ஆகிறார். டிசம்பர் 12 ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதையடுத்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதனால் இன்று காலை முதலே முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

இந்தத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, கார்பின் தலைமையிலான லேபர் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் நேரடிப் போட்டி. இந்தத் தேர்தலின் அடிநாதமே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் எக்சிட் ஆகவேண்டுமா வேண்டாமா என்பதாகத்தான் இருந்தது. இதுதான் சுருக்கமான பிரெக்சிட் என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் Brexit. (Britian Exit) அதாவது பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இரு சொற்களை சுருக்கி இந்த ஒற்றைச் சொல் பயன்படுத்தப்பட்டது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர். பிரெக்ஸிட்டிற்கு ஆதரவாக தீவிரமாகப் பரப்புரை செய்தவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரதானமாக இருந்தவர். ஆனால் லேபர் கட்சி பிரெக்சிட்டுக்கு எதிரானது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 43% வாக்குகளைப் பெற்று 363 தொகுதிகளை வென்றுள்ளது. லேபர் கட்சி 32% வாக்குகள் பெற்று 203 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. இதையடுத்து இந்திய பிரதமர் மோடி போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து சொல்லியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *