சீட் கொடுக்காதது அவமரியாதை: வருத்தத்தில் அத்வானி

public

மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இம்முறை சீட் கொடுக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறும் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் 297 பேரை இதுவரை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இம்முறை வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னாவிலும், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியும் இம்முறை களம் காண்கின்றனர்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகரில் போட்டியிடுவார் என்று மார்ச் 21ஆம் தேதி வெளியான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. காந்தி நகரில் இதற்கு முன்பு 6 முறை போட்டியிட்டவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது என்று அண்மையில் நடந்த பாஜக உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அத்வானிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இச்செயலால் பாஜக மூத்த தலைவரான அத்வானி மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எல்.கே.அத்வானிக்கு நெருக்கமான, பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் *என்டிடிவியிடம்* பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் அத்வானிக்கு போட்டியிட இடம் கிடைக்காதது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், அவருக்குப் போட்டியிட மறுக்கப்பட்ட முறை மிகவும் அவமரியாதைக்குரியதாக உள்ளது. கட்சியிலிருந்து பெரிய தலைவர்கள் யாரும் அவரைத் தொடர்புகொள்ளவே இல்லை” என்றார்.

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு அளிக்கும் பாஜகவின் புதிய கொள்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் லால், அத்வானியை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். ஆனால் அத்வானி இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களான சாந்தகுமார், ஹுகும்தியோ யாதவ், கல்ராஜ் மிஸ்ரா, பகத் சிங் கோஷியாரி, பி.சி.கந்தூரி உள்ளிட்டோருக்கும் இம்முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தகுமார், கல்ராஜ் மிஸ்ரா ஆகிய இருவர் மட்டுமே கட்சியின் இம்முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் 75 வயதைக் கடந்த முரளி மனோகர் ஜோஷியும், சுமித்ரா மகாஜனும் போட்டியிட தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *