கொசு கிட்டயே ஒரு மனு கொடுத்துருக்கலாம்! : அப்டேட் குமாரு

public

நாளாக நாளாக நம்ம அரசோட விஞ்ஞான அறிவு எல்லை மீறி போய்கிட்டு இருக்கு. டெங்கு வராம தடுக்க ப்ளிச்சிங் பவுடர் போட சொன்னா கோல மாவை போட்ருக்காங்கப்பா. வெள்ளையா இருக்குறது எல்லாம் ப்ளிச்சிங் பவுடர்ன்னு நினைச்சாங்களா இல்லை கோலமாவு தான் தெளிக்கனும்னு அமைச்சர்கள் யாராவது அட்வைஸ் பண்ணிருப்பாங்களா? ஆனா ஒண்ணு இது மட்டும் டெங்கு கொசுவுக்கு தெரிஞ்சதுன்னா ‘நம்மளை விட மோசமான கடியை எல்லாம் அனுபவிச்சுகிட்டு இருக்காங்க’ன்னு நம்ம மேல இரக்கப்பட்டு கடிக்காமயே போயிடும். இதல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமான்னுலாம் யாரும் கேட்டுடாதீங்க. முதல்வர், துணை முதல்வரை கலாய்ச்சா உள்ள தூக்கி போட்ருவாங்களாம். நமக்கு எதுக்கு வம்பு. அப்டேட்டை பாருங்க. நான் போய் கொசு பேட் வாங்கிட்டு வந்துடுறேன்.

**சிலம்பரசன் செல்வராசு**

மோடியின் நிர்வாகத்தால் வளர்ச்சிப்பாதையில் இந்தியா,

-நிதீஷ் குமார்

ஜாடையில நிதிஷ் ஜீ அப்படியே நம்ம பன்னீர் போலவே இருக்காப்ல இல்ல

**Alexander Lawrence**

6 நிமிடத்தில் டெங்கு ஒழிக்கக்கூடிய மருந்து மத்திய அரசிடம் உள்ளது – தமிழிசை.

இந்த படர்தாமரையை 6 நிமிடத்தில் ஒழிக்க எதாவது மருந்து இருக்கான்னு கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ்!!

**Alexander Lawrence**

நாலு வார்த்தை எழுத கத்துக்கிட்ட உடனே கத்துக்கிற உரிமையை வாங்கி குடுத்தவனையே ஏக வசனத்தில் வசைபாடுவதுதான் டமில் டேசிய தமிழர் பண்பாடு !

**Jeyachandra Hashmi**

ஆறாம் பக்கம் : ‘முதல்வரை சந்தித்தார் நடிகர் விஜய்’

முதல் பக்கம் : ‘மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது விலங்குகள் நல வாரியம்’

அப்ப தடை போட்டது யாரு ??

**Richard Elumalai**

இந்தியாவின் பலத்தை சீனா உணர்ந்துவிட்டது: ராஜ்நாத் சிங்

தேர்தலுக்கு முன் நீங்க கொடுத்த பில்டப்பும் இப்பதான் நாட்டு மக்களுக்கும் புரிகிறது..

**ajmalnks**

பட்டாசு வெடிங்க, ஆனா புகை வராம பாத்துக்கங்க -சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

விட்டா வாயை திறக்காம சாப்பிடுங்கன்னு சொல்லுவாரு போல

**Lachu**

தீபாவளி போனச எங்க தர்றாங்க…

வேலை இருந்தா தான்

தருவாங்களாம்.

**uzavarmagan**

தமிழர்களின் இதயங்களில் வீற்றிருப்பவர் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – முதலமைச்சர் பழனிசாமி

அவரு மொகத்தக்கூட முழுசா பாக்கலையேப்பா..

**Kozhiyaar**

படிப்புக்கேற்ற வேலை விரும்பும் பலர், படிப்புக்கேற்ற மூளை பெற முயல்வதில்லை!!

**aselviku**

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை செயல்படுகிறது: -எடப்பாடி.

ஆமா.. ஸ்காட்லாந்து போலீஸ் எப்ப ஆட்டோவை கொளுத்தியது..?

**ajmalnks**

மழைக் காலத்தில் காய்ச்சல் வரும்-செல்லூர் ராஜு

வெயில் காலத்தில் வேர்க்குரு வரும் அதானே…

**kayal**

நாளைக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் வந்து மக்கள் டெங்கு கொசுவை கடிக்க அனுமதித்ததால் தான் டெங்கு பரவுதுனு சொல்வார் பாருங்க

**ajmalnks**

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை.-செய்தி

ஓனர் இருக்க பயமேன் – ஈபிஎஸ் & ஓ.பி.எஸ் க்ரூப்ஸ்

**வி.சி. வில்வம்**

கண்ணியமான பெண்கள் யாரும் சபரிமலைக்கு வரமாட்டார்கள் – தேவசம் போர்டு தலைவர்.

ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்து தான், நீங்கள் தலைவர் ஆனீர்கள்!

**azam_twitz**

பிளிச்சிங் பவுடருக்கு பதில் கோல மாவு தெளிப்பு-செய்தி

மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழசு

வெள்ளையா இருப்பதெல்லாம் பிளிச்சிங் பவுடர் இல்லை புதுசு

**ShivaP_Offl**

ஏழைஎளியமக்கள் சைனாபொருளை வாங்கவேகூடாதாம்

ஆனா,சைனாபோனோட கம்பனிகிட்ட காசுவாங்கிட்டு தேசியடீமோட ஜெர்சியில பிரிண்ட்செஞ்சு விளையாடுவாங்களாம்

**CreativeTwitz**

முதல்வர் துணை முதல்வரை விமர்சித்தால் கைது !

அப்போ EPS சை விமர்சிச்ச OPS சையும், OPS சை விமர்ச்சிச்ச EPS யும் தான் முதல்ல கைது பண்ணனும்

**Thaadikkaran**

தீபாவளிக்கு பட்டாசு வெடிச்ச காலம் போய், மொபைல்ல பட்டாசு வெடிக்குற GIF அனுப்பிச்சு தீபாவளி கொண்டாடுற மாதிரி ஆயிடுச்சு..!

**வாசுகி பாஸ்கர்**

கேரளாவில் பாஜகவினர் தாக்கப்பட்டால் கம்யூனிஸ்ட் கட்சி டிபாசிட் இழக்கும், பாஜக ஆட்சியை பிடிக்கும் – பொன்ராதா கிருஷ்ணன்

உள்ளூர்ல ஊறுகா இல்லையாம், பக்கத்து ஊர்ல பாயாசம் கேட்குதாம்.

**கருப்பு கருணா**

சார்..இது இந்து கடைதானே..

இல்லீங்க…அல்வா கடை…

அதான் சார்..இந்து அல்வா கடைதானே..

இல்லீங்க..இந்து அல்வா இல்லீங்க…கோதுமை அல்வாதான் இருக்கு.

அட..என்னங்க..சார்..இந்துக்களே செய்த அல்வாதானே..

செய்தது இந்துதான்..ஆனா கோதுமை பஞ்சாப்ல இருந்து வந்தது.சீக்கியர் விளைவிச்சது.அவங்க இந்துக்கள் இல்லியே..

சரி..ஆபத்துக்கு பாவமில்ல…ரெண்டு கிலோ குடுங்க…

தம்பி…இப்ராகீம்..சாருக்கு பார்சல் பண்ணு..பில்லை அங்க குடுத்துடுங்க சார்..யப்பா டேவிட்டு…சார்கிட்ட பில்லு வாங்கிக்கோ..

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *