]அர்னால்டின் ஆஸ்கர் கனவுக்கு ‘Aftermath’

public

லியாட் லெஸ்டர் இயக்கியிருக்கும் திரைப்படம் Aftermath. இந்தத் திரைப்படத்தில், வயசானாலும் ஹீரோ கெட்-அப்ல தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கேரக்டர் எதுவாக இருந்தாலும் செய்துவருகிறார் நடிகர் அர்னால்டு ஷ்வர்சனேகர். அந்த மலை மாதிரியான உடல் இந்தப் படத்தின் டிரெய்லரில் குலுங்கிக் குலுங்கி அழுவதைப் பார்த்தாலே நெஞ்சம் துடிக்கிறது. எவ்வளவோ திரைப்படங்களில் நடித்து பெயர், புகழ் எனப் பெற்றிருந்தாலும் அர்னால்டு இதுவரை ஆஸ்கர் விருதை வென்றதில்லை. இம்முறை எப்படியும் வாங்கிவிடவேண்டும் என்று அர்னால்டு எடுத்திருக்கும் முடிவு தான் Aftermath.

சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட மகள் அவளது மகளுடன் திரும்பி வரும்போது விமான நிலையத்துக்கே செல்கிறார், பேத்தியைக் காணும் ஆவலிலிருந்த தாத்தா. ஆனால், ஒரு விமான நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவால் அந்த விமானம் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்து ஏற்படக் காரணமாகவிருந்தவனைப் பிடித்து மன்னிப்பு கேட்கவைப்பது தான் கிளைமேக்ஸ். வழக்கமான அர்னால்டு படங்களில் இருப்பதைப் போல சண்டையும், கவர்ச்சியும் துளியும் இல்லை. இம்முறையாவது அர்னால்டின் ஆசை ஆஸ்கராகக் கையில் வந்து விழவேண்டும்.

[Aftermath டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=jLBrkK-ZnI0)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *