“அவர்களுக்கு தெரியாது”: தோனி சொன்ன குட்டி ஸ்டோரி… வைரலாகும் வீடியோ!

Published On:

| By Monisha

ms dhoni kutty story

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும், விளையாடவில்லை என்றாலும் , எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் மகேந்திர சிங் தோனி.

முன்னதாக, ரோல்ஸ் ராய்ஸ் காரில் ராஞ்சியில் வட்டமடித்தது, இளம் கிரிக்கெட் வீரருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்தது என தோனி சார்ந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துகொன்டே தான் இருக்கிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், அண்மையில் 2011 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் பங்கேற்ற இந்திய அணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து தோனி பேசிய கருத்து இணையத்தில் வைரலானது. மேலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாக தோனி ஆமோதித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த செய்திகள் மூலமாக மீண்டும் ட்ரெண்டிங்கிற்கு வந்தார், தோனி.

இந்நிலையில், தான் கரக்பூரில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றிய அனுபவம் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு போட்டியில் எப்படி உதவியது என தோனி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில், தான் கரக்பூரில் பணியாற்றிய போது, பெங்காலி மொழியை பேச நன்கு கற்றுக்கொண்டதாகவும், அம்மொழியை நன்றாக புரிந்துகொண்டதாகவும், இப்படியான நிலையில்,

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு போட்டியில் தான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, தனக்கு பெங்காலி தெரியாது என கருதிக்கொண்டு விக்கெட் கீப்பர் பந்துவீச்சாளருக்கு பெங்காலியில் அறிவுரை வழங்கியதாகவும்,

அவர்கள் எம்மாதிரியான பந்தை வீசப் போகிறார்கள் என முன்னதாகவே அறிந்து நன்றாக விளையாடியதாகவும், இந்த சூழலில் போட்டி முடிந்த பிறகு ‘இவருக்கு பெங்காலி தெரியும்’ என வங்கதேச வீரர்கள் கூறியதாகவும், ஒரு குட்டி ஸ்டோரியை தோனி கூறியிருந்தார்.

தனக்கே உரிய ஒரு நகைச்சுவையான பாணியில், தோனி இந்த நிகழ்வை விவரிக்க, அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

மின் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்தது!

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: காரணம் என்ன?

நாட்டில் 77 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன்: எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share