apartments eb bill price reduced

மின் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்‌ கட்டண குறைப்பு இன்று (நவம்பர் 1) முதல்‌ அமலுக்கு வந்துள்ளது.

அடுக்குமாடி பொதுபயன்பாட்டிற்கான மின்‌ கட்டணம்‌ ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல்‌ இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும்‌ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ கடந்த மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதுகுறித்து அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது எனவும், இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது எனவும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் கருத்து தெரிவித்தன.

அவற்றை பரீசீலித்து பத்து வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்குச் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8.15 ரூபாயிலிருந்து 5.50 ரூபாயாக குறைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடுக்குமாடி பொதுபயன்பட்டிற்கான மின்‌ கட்டணம்‌ நாளை (நவம்பர் 1) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை 10 வீடுகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌, 3 மாடிகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌ உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை ஐ.இ-யை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்‌ அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்குடியிருப்புகளுக்கு யூனிட்டுக்கு மின்கட்டணம்‌ ரூ.5.50 என நிர்ணயித்துள்ள நிலையில், அது இன்று (நவம்பர் 1) முதல்‌ அமலுக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்தது!

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0