வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று (நவம்பர் 1) ரூ.101 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி மாதந்தோரும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. நவம்பர் 1 ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்துள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.203 அதிகரித்து ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி!