மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஜிஎஸ்டி: ரிட்டன் தாக்கலில் முறைகேடு!

ஜிஎஸ்டி: ரிட்டன் தாக்கலில் முறைகேடு!

ஜிஎஸ்டி3-ஆர் ரிட்டன் தாக்கல் செய்தவர்களில் 16 சதவிகிதம் பேரின் தகவல்கள் மட்டுமே ஜிஎஸ்டி1-ஆருடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ‘கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 34 சதவிகித தொழில் புரிபவர்கள் ரூ.34,000 கோடி வரி குறைவாகச் செலுத்தியுள்ளனர். இவர்கள் ரூ.8.16 லட்சம் கோடி ஜிஎஸ்டியின் கீழ் (ஜிஎஸ்டிஆர்-3பி) வரி செலுத்தியுள்ளனர். முன்னதாக ஜிஎஸ்டிஆர்-1இல் இவர்கள் செலுத்திய வரித் தொகையின் மதிப்பு ரூ.8.50 லட்சம் கோடியாகும். அதேபோல 49.36 சதவிகிதப் பேர் ரூ.91,072 கோடி கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர். இவர்கள் ஜிஎஸ்டிஆர்-3பியாக ரூ.6.50 லட்சம் கோடி செலுத்தியுள்ளனர். ஜிஎஸ்டிஆர்-1இல் இவர்கள் செலுத்திய வரித் தொகையின் மதிப்பு ரூ.5.59 லட்சம் கோடியாகும்.’

இந்த நிலையில் இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தொழில்களுக்கான வரி செலுத்தியவர்களில் 16 சதவிகிதம் பேரின் வரித்தாக்கல் படிவங்கள் மட்டுமே ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி ஆகிய இரண்டும் ஒத்துப்போகிறது. இவர்கள் செலுத்திய வரித் தொகை ரூ.22,014 கோடியாகும். இதுகுறித்து ஏஎம்ஆர்ஜி & அசோசியேட்ஸ் பங்குதாரர் ராஜத் மோகன் கூறுகையில், “84 சதவிகித வரி செலுத்துபவர்கள் முறையான வருமான விவரங்களைக் கூறவில்லை. அதனால்தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி முறை என்பது சுதந்திரமான, தானியங்கிமயமான மற்றும் டிஜிட்டல் வரியமைப்பாகும். வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையிலான தரவு உள்ளீடுகளில் பிழைகள் செய்தல் இயலாதது” என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி வசூலைப் பொறுத்தவரையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் ரூ.93,530 கோடி வசூலானது. ஜனவரி மாதத்தில் ரூ.88,047 கோடி வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 21 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon