பொலிவியாவின் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான லியானார்டோ லோசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொலிவியாவின் ஆளும் சோஷலிஸ்ட் கட்சி தனது 21வது ஆண்டு நிறைவு விழாவைத் தொடங்கியுள்ளது. 1999ம் ஆண்டு பொலிவிய சோஷலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. 2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில், இவோ மொரேல்ஸ் வெற்றிபெற்றார். 2005 முதல் 2013ம் ஆண்டுவரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறோம். வறுமை அளவு 38.2 சதவிகிதத்தில் இருந்து 17.8 ஆகவும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தியிருப்பது, கல்வி, சுகாதாரத்துக்கான தொகை அதிகரிப்பு, பழங்குடி மக்களின் அரசியல் பங்கேற்பு என பலவகைகளில், உழைப்பாளிகளின் கோரிக்கைகளுக்கு மட்டும் போராடாமல், அதிகாரத்தைக் கைப்பற்றி சேவைசெய்யும் அமைப்பாக மாறியிருப்பதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டில், கடந்தகால நடவடிக்கைகள் விமர்சனபூர்வமாகவும், ஆய்ந்தும் பார்க்கப்படும். 21வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன எனக் கூறினார்�,
21 ஆண்டுகள் நிறைவு: பொலிவிய சோஷலிஸ்ட் கட்சி பெருமிதம்
+1
+1
+1
+1
+1
+1
+1