மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

கூந்தல் வெட்டப்படுவதை எதிர்த்து போராட்டம்!

கூந்தல் வெட்டப்படுவதை எதிர்த்து போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெண்களின் கூந்தல் வெட்டப்படுவது அதிகரித்து வருவதை எதிர்த்து ஹூரியத் தலைவர்கள் நேற்று (அக்டோபர் 9) முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபகாலமாக காஷ்மீரில் பெண்களின் கூந்தல் வெட்டப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனந்த்நாக், குல்காம் பகுதிகளில் இந்தச் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. இது பெண்களின் கண்ணியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் எனக் கூறி ஹூரியத் தலைவர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஸ்ரீநகரில் கடைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. எனினும், அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் போராட்டங்களை தடுக்க ஏழு காவல் நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்யும் வகையில் காவல்துறையின் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 6 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதிகளில் வன்முறைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon