கலைஞர் நாணயம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்கின் முழு பயண விவரம்!

Published On:

| By christopher

Rajnath Singh coming to Chennai

மறைந்த முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி சென்னை கலைவாணர் அரங்கில் வரும் நாளை (ஆகஸ்ட் 18) ரூ.100 நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.

இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் பயண விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி 18ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார்.

காலை 10.20 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடையும் ராஜ் நாத் சிங், 10.30 மணிக்கு தனி விமானத்தில்  சென்னைக்கு புறப்படுகிறார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும் அவர், 1.20 மணிக்கு விமான நிலையத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு செல்கிறார்.

அங்கிருந்து 1.30 மணிக்கு சாலை வழியாக காரில் புறப்படும் ராஜ் நாத் சிங்,  2 மணிக்கு சென்னை கடலோர காவல்படை பிராந்திய தலைமையகத்தை (கிழக்கு) வந்தடைகிறார்.

ADVERTISEMENT

அங்கு சுமார் 3 மணி நேரம் ஓய்வு எடுக்கும் அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை அங்குள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) கட்டிடத்தில் நடக்கும் திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

பின்னர் 6 மணிக்கு சென்னை கடலோர காவல்படை பிராந்திய தலைமையகத்தில் (கிழக்கு) இருந்து புறப்பட்டு, 6.10 மணிக்கு கலைஞர் நினைவிடத்திற்கு சாலை வழியாக காரில் செல்கிறார்.

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, 6.40 மணிக்கு காரில் புறப்பட்டு, 6.45 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார்.

மாலை 6.50 மணி முதல் 7.30 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, கலைஞரின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறார்.

அதன்பின்னர் 7.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காரில் சாலை வழியாக பயணித்து 8.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார்.

இரவு 8.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திரும்பும் அவர், 10.55 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தை அடைகிறார்.

அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றடைகிறார்.

முன்னதாக கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம் முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா; பிரண்டைக் காரக்குழம்பு!

தங்கலானே… தங்கலானே : அப்டேட் குமாரு

கலைஞர் நாணய வெளியீடு… ராகுலை அழைக்காதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share