தங்கலானே… தங்கலானே : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நேத்து லீவு போட்டு தங்கலான் படத்த பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாக்க போயிருந்தார் பக்கத்து சீட்டு கலீக்.

அப்போ அங்க ரிவ்யூஸ் கேக்கும் போது, படத்த ஆகா, ஓகோனு ஒரே பாராட்டு தான்.

ஆபிஸ்ல வந்தும் படத்த பத்தி பேசிட்டே இருந்தான்… அத கேட்டதும் படத்த பாக்க போலாம் போலனு தோனுது.

அவன் சொன்னது உண்மையா இருந்தாலும்…  இந்தியன் 2 படத்தையும் முதல்ல பாத்துட்டு வந்து ’வெற லெவல்’னு சொன்னான். நம்பி போனதுக்கு தலை தெறிக்க ஓடி வந்தது தான் மிச்சம்.

அதான் இவன நம்பலாமா வேண்டாமானு ஒரே பயமா இருக்கு… இருந்தாலும் நாளைக்கு தங்கலான் பாக்க போறேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

நல்லவனாவது ரொம்ப ஈஸி .. அடுத்தவர்களை குறை சொன்னால் போதும்

Sairam

ஒன்னு சொல்றேன் தெரிஞ்சுக்கோ. நீ மொய் செஞ்சவங்க கூட உனக்கு மொய் செய்யாம ஏமாத்தலாம். ஆனால் எப்போவும் உனக்கு மொய் வச்சவங்கள நீ ஏமாற்றாத.. இதுதான் வாழ்க்கை தத்துவம்.

Arun Pandiyan

**Family trip in Kanchipuram** மீ: காலைலயிருந்து கோயிலுக்கா போயிட்டு இருக்கோம். டயர்டாயிருக்கு. ஹோட்டலுக்கு போய் நல்லா சிக்கன் சாப்பிட்டே ஆகனும்.

Wife: நான்வெஜ்ஜா? நோ! கோயிலுக்கு போயிட்டு ஒரு உயிரைக் கொல்லுற இடத்துக்கு யாராவது போவாங்களா?

பட்டுக்கடைக்கு போவோம்.

Aadhavan Dheetchanya

என்னது, தலித் அல்லாதார் கூட்டமைப்பு வைத்து, சத்திரிய வீரம் பேசினதும் இப்போ பட்டியல் சாதியினரோட ஆதரவு கேட்கிறதும் ஒரே ஆளா?

கடைநிலை ஊழியன்
என்ன award கிடைக்கால னு வருத்தமா இருக்கா.. ? இல்ல.. கிடைச்சிருந்தா தான் வருத்தமா இருந்திருக்கும்..

ச ப் பா ணி

Positive thinking என்பது எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பதன் வெளிப்பாடு

Mannar & company™

என்ன சார் வரலட்சுமி விரதத்தை நீங்க ஏன் சிறப்பா கொண்டாடுறீங்க? என்ன பண்றது இந்த ஒரு நாள்தான் மனைவி என்னை மதித்து என் கால்ல விழுறா அதான்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”மக்களிடம் கெட்ட பெயர்”: மேயர்கள், சேர்மன்கள், கவுன்சிலர்களை எச்சரித்த ஸ்டாலின்

திமுக மா.செ கூட்டம்: ஆ.ராசா வராதது ஏன்? உதயநிதி வந்தது ஏன்?

+1
4
+1
24
+1
1
+1
12
+1
2
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *