டாப் 10 நியூஸ் : அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம் முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வரை!

Published On:

| By Kavi

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த பணிகளையும் செய்யப் போவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம்!

திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று செயல்பாட்டுக்கு வருகிறது. காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

GOAT ட்ரெய்லர்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

சதுரகிரி செல்ல அனுமதி!

ஆடி மாத பௌர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை டு நாகை!

நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் மறுமார்க்கமாக இன்று இலங்கையிலிருந்து நாகைக்கு ‘சிவகங்கை’ கப்பல் வருகிறது.

தொழிலாளர்கள் விடுதிகள் திறப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்கள் தங்குவதற்காக 18720 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.

மழை அப்டேட்!

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குற்றாலத்தில் சாரல் விழா!

குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று இரண்டாவது நாளாக நடை பெறுகிறது. வரும் ஆகஸ்ட் 20 வரை இவ்விழா நடைபெறுகிறது.

மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்!

மத்திய அரசின் முக்கியத் துறைகளைச் சோ்ந்த செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வரும் புன்யா சாலிலா ஸ்ரீவாஸ்தவா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 153-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா; பிரண்டைக் காரக்குழம்பு!

டிஜிட்டல் திண்ணை: இரவு வரை போராடிய ஓபிஎஸ்… எகிறி அடித்த எடப்பாடி: அவசர செயற்குழு லைவ்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel