Uகாஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

entertainment

நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் இயக்குநர் பேரரசுவின் ‘பழனி’ படம் மூலமாக அறிமுகமானார். ‘மாரி’, ‘மஹதீரா’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் தொழிலதிபரான கெளதம் கிச்சுலுவுக்கும் கடந்த 2020ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து முடிவு செய்வேன் எனவும் கிச்சுலு விருப்பப்பட்டால் அவருடைய பிசினஸ்ஸில் கவனம் செலுத்துவேன் எனவும் காஜல் தெரிவித்து இருந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே காஜல் கர்ப்பமானார். இதனால், அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ‘இந்தியன்2’ உள்ளிட்ட சில படங்களில் இருந்தும் விலக நேரிட்டது.

காஜல் அகர்வாலும் தான் கர்ப்பமான விஷயத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் உறுதி செய்தார். மேலும் கர்ப்ப காலத்தில் தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக கேலி கிண்டல் எதிர்கொண்டதற்கும் தக்க பதிலடி கொடுத்தார் காஜல். ‘தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியான ஒரு காலக்கட்டம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையான ஒன்று. அதனை புரியாதவர்கள் தான் தேவையில்லாமல் நேரம் செலவழித்து கொண்டிருக்கிறார்கள். நான் மகிழ்ச்சியாகவே என் தாய்மை காலக்கட்டத்தை எதிர்கொள்கிறேன்’ என கூறி இருந்தார்.

கடைசியாக காஜல் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘ஹே சினாமிகா’. இப்போது காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என காஜலின் தங்கை நிஷா அகர்வாலும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இதை உறுதி செய்திருக்கிறார்.

மேலும் அவர், காஜலுக்கு பிறந்த குழந்தையின் பெயர் ‘Neil Kitchlu’ என்பதையும் மகிழ்ச்சியுடன் தற்போது பகிர்ந்துள்ளார்.

நேற்று காலை காஜலுக்கு குழந்தை பிறந்ததாகவும் அவனுடைய அழகான சிரிப்பு, மின்னும் கண்கள் தங்கள் நாளை அழகாக்கி உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவனது குட்டி பாதங்களும் அழகான கால்களும் நகங்களும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தங்களது குட்டி உலகத்துக்கு அவனை வரவேற்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் காஜல்- கிச்சுலு தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *