வடிவேலு பிறந்தநாள்: தெறிக்கவிட்ட சேரன்

entertainment

நடிகர் வடிவேலு இதுவரை கொண்டாடிய பிறந்த நாட்களில் அவரது 61 வது பிறந்தநாள் முக்கியமானது. வனவாச காலம் முடிந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்காக அவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்கள்.

இயக்குநரும், நடிகருமான சேரனும் தன் பங்குக்கு வடிவேலுவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.

வடிவேலு இதுவரை நடித்த படங்களில் மறக்க முடியாத, மிகச்சிறந்த காமெடி இடம்பெற்ற படங்கள் என பட்டியலிடப்படும் படங்களில் முதல் பத்து படங்களில் இடம்பெறுவதில் வெற்றிக்கொடி கட்டு தவிர்க்க முடியாத படமாகும்.

வெற்றிக் கொடிகட்டு படத்தில் வடிவேலுவும், பார்த்திபனும் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் தமிழ்த் திரை ரசிகர்களால் மறக்க முடியாததாகும். துபாய் குறுக்கு சந்து என்ற அந்த வசனத்தை கேட்டாலே சிரிப்பு வந்துவிடும்.

அதே டயலாக்கை பயன்படுத்தியே அந்தப் படத்தை இயக்கிய சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் வடிவேலு அய்யா. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்துல இருந்து பேசுறேன். நீங்க மறுபடிக்கு துபாய்க்கு வந்தது சந்தோஷம்யா.. வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா. காமெடில நீங்க எப்பவுமே கிங்…” என்று ட்வீட் செய்திருந்தார் இயக்குநர் சேரன்.

நேற்றைய தினம் வடிவேலு பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தபோதும் இயக்குநர் சேரன் பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டது .

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *