கொரோனா தத்துவங்களும், கொண்டக்கடலை சமையலும்: அப்டேட் குமாரு
‘இந்த கொரோனா வைரஸ் வந்து, லாக்டவுன் ஆரம்பிச்சதுக்கு அப்புறமா நிறைய விஷயம் புதுசா கத்துக்கிட்டேன்’னு ஃப்ரெண்ட் ஒருத்தன் ஃபோன் பண்ணும் போது சொன்னான். ‘என்னடா ஆன்லைன் கிளாஸ் ஏதாவது அட்டென்ட் பண்றியா’ன்னு நான் கேட்டேன். அதுக்கு அவன், ‘அதெல்லாம் இல்ல மச்சான். வெயில் வந்தது, இப்போ ஏதோ புதுசா புயல் வருது, மழை வருது. ஆனா வீட்டுக்குள்ளேயே இருக்கிறதால இது எதுவுமே தெரிய மாட்டேங்குது. அது தான் மச்சான் கொரோனாவயே சமாளிச்சிட்டோம்.இனிமே எத வேணாலும் சமாளிக்கலாம் இப்பிடி நிறைய வாழ்க்கைப் பாடம் கத்துக்கிட்டேன்’ அப்படின்னு சொல்றான். கூடவே, ‘பரவாயில்ல குமாரு, வேலையே போனாலும் ‘கொரோனா தத்துவங்களும், கொண்டக்கடலை சமையலும்’னு புக்கு எழுதியாவது வாழ்ந்திரலாம்’னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் இன்னும் நாலு தத்துவம் கேட்டுட்டு வர்றேன்.
**Vanitha**
இந்த மதுப் பிரியர் மாதிரி மத்திய அரசு தனியார் பிரியராம்
**சரவணன்.M**
“ஒபாமா திறமையற்ற ஜனாதிபதி” – டிரம்ப்.
ஆமாமா… இப்ப அவர்தான் பதவியில் இருக்காரு, பாருங்க…!
**மயக்குநன்**
குறிப்பிட்ட துறைகள் தவிர அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்!- நிர்மலா சீதாராமன்.
மொத்தத்துல… எல்லா துறைகளையும் உங்களுக்குப் பிடிச்ச ‘துரைகள்’கிட்ட கொடுக்க பிளான் பண்ணிட்டீங்க போல..?!
**சப்பாணி**
நான் ஆம்பன் புயல் வந்திருக்கேன்
போய்ட்டு அப்புறம் வாப்பா..ஊரடங்கில் இருக்கோம்
**சப்பாணி**
யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.
**ரஹீம் கஸ்ஸாலி**
டாஸ்மாக் செல்ல போக்குவரத்து வசதியில்லை. பஸ்சை விடுங்க. அப்பத்தான் போய் வாங்கிக்குடிக்க முடியும் என்று யாராவது ஒரு மதுப்பிரியர் சொன்னால் பஸ்சை உடனே விட்டுடப்போறாங்க.
**நாகராஜசோழன்.M A.MLA**
நாம் இந்த விசயத்தை கற்று கொண்டோம் என மிதப்பாக இருக்கும்போது,
‘பளார் ‘ என கன்னத்தில் அறைந்து இன்னும் கற்று கொள்ள நிறைய இருக்கிறது என்கிறது வாழ்க்கை
**Maggi**
புரிதல் என்பது கேள்விகளுக்கு பதில் சொல்வதல்ல.
உணர்த்துவதும் உணர்வதுமே புரிதல்.
**மழை முகில்**
எப்போது நீ சரிந்தாலும்
இப்படியே எண்ணிக்கொள்.
இது தண்டனை அல்ல
எச்சரிக்கை மட்டுமே…
எப்போது நீ ஜெயித்தாலும்
இப்படி நினைத்துக்கொள்.
இது முடிவு அல்ல
துவக்கம் மட்டுமே…
**மெத்த வீட்டான்**
கொரோனாவும் லாக்டவுனும் மாதிரி மழையும் பவர்கட்டும் !
**கோழியின் கிறுக்கல்**
கரோனா, நம் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவலத்தை நமக்கே உணர்த்தியிருக்கிறது என்பதே உண்மை!!
**மாஸ்டர் பீஸ்**
பொறுமை என்பது கோழைத்தனமல்ல,
சமயத்தில் அது சாணக்கியத்தனம்!!!
**மெத்த வீட்டான்**
புயல் தமிழ்நாட்டு பக்கம் வரக்கூடாது என்பது மக்களின் கவலை
அப்படி ஏதும் வந்தால் டாஸ்மாக் திறப்பாங்களா இல்லையா என்பது மது குடிப்பவர்களின் கவலை !
**ராசா**
லாக்டவுன் நீக்கப்பட்டதால் இந்த காலகட்டத்தை சமாளிக்க 2000 ரூபாய் அக்கவுண்ட்ல போட்டுவிட்டுங்க… பதிலாக கொடுக்கற கொண்டைகடலைல கால் கிலோ குறைத்துக் கொள்ளுங்கள்
**ரஹீம் கஸ்ஸாலி**
மே 31 வரை தமிழகத்தில் லாக் டவுன் நீட்டிப்பு- செய்தி.
பொதுவா லாக் டவுன் என்று சொல்லாமல்; சலூன் கடைகளுக்கும், சினிமா தியேட்டருக்கும் லாக் டவுன் நீட்டிப்புன்னு சொல்லுங்க.
**இதயவன்**
தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாக்ஸி, ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி #
ஆட்டோ டாக்ஸில போற அளவுக்கு தமிழ்நாட்டுல வசதியான மல்டி மில்லியனர் இன்னுமா இருக்காங்க?!!
**இபிவா**
“நான் சொல்வதையும் கேள்”
என்பவரை விலகாதே.
“நான் சொல்வதை மட்டும் கேள்”
என்பவரோடு பழகாதே.
**Anu**
வாழ்க்கை,, ice cream மாதிரி,,
Waste பண்ணாலும் கரையும்,,
Taste பண்ணாலும் கரையும்,,
So, waste பண்ணாமல் taste பண்ணுங்க..
~கொரானா தத்துவம்
**-லாக் ஆஃப்**
�,”