நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.
இன்று (19.1.2025) காலை அண்ணா அறிவாலயத்தில் நடிகர் சத்யராஜ் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சரும், முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, “நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்துக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சி. அதற்கு உதாரணம் காலை உணவுத் திட்டம் .
திமுக பெண்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சி. அதற்கு உதாரணம் புதுமை பெண் திட்டம். இதை எல்லாவற்றையும் விட திமுக எல்லா மதத்துக்கும் மரியாதை தரும் கட்சி.
மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதும், கடமையை செய்ய வேண்டும் என்பதும்தான் எனது அடுத்த திட்டம். கட்சியில் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதற்கு நான் உண்மையாக இருப்பேன்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“பேரு வச்சா போதுமா… சோறு வைக்கணும்” எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!