அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் அறிவுலக நூலகத்திற்கு போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக, தமிழக வெற்றி கழக கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
அந்த எஃப்ஐஆர்-இல், சாட்ஜிபிடி மூலம் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அகல் விளக்கு பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து 1857 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2026 பிப்ரவரி மாதம் புத்தகங்கள் பெறப்பட்ட நிலையில் மார்ச் மாதம் முதல் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனின் வீடு, கோவை பெரியார் அறிவுலகம், தென்காசி நூலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வரும் நிலையில் அகல்விளக்கு உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.









