மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ் ஐபிஓ நவம்பர் 19-ல் திறக்குது! பங்கு விலை ரூ.129 முதல் ரூ.136…!

By Minnambalam Desk

|

Published on 16 Nov 2026, 6:32 PM

பொதுத்துறை நிறுவனத்தின் இன்னொரு பெரிய ஐபிஓ இப்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை இழுத்திருக்கிறது. கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Mahanadi Coalfields Limited), தன் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான விலை வரம்பை அறிவித்துள்ளது.

மொத்தம் ரூ.8,981.2 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, வரும் நவம்பர் 19-ம் தேதி சந்தாவுக்குத் திறக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.129 முதல் ரூ.136 வரை.

ADVERTISEMENT

முக்கியத் தேதிகள்

  • நவம்பர் 18: ஆங்கர் முதலீட்டாளர்களுக்குப் பங்கு ஒதுக்கீடு.
  • நவம்பர் 19 – 23: ஐபிஓ சந்தா.
  • நவம்பர் 25: பங்கு ஒதுக்கீடு இறுதியாகும் என எதிர்பார்ப்பு.
  • நவம்பர் 27: BSE, NSE சந்தைகளில் பட்டியலிடத் திட்டம்.

இது முழுக்க ஆஃபர் ஃபார் சேல்

ADVERTISEMENT

இந்த வெளியீட்டில் மொத்தம் 66.18 கோடி பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. இது முழுமையான ஆஃபர் ஃபார் சேல் (OFS) முறை. அதாவது, கோல் இந்தியா நிறுவனம் தனக்குச் சொந்தமான துணை நிறுவனத்தில் 10 சதவீதப் பங்குகளை விற்கிறது. இதனால் ஐபிஓ மூலம் வரும் பணம் மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்துக்குப் போகாது. பங்குகளை விற்கும் கோல் இந்தியாவுக்கே போய்ச் சேரும்.

எவ்வளவு பணம் வேண்டும்?

ADVERTISEMENT

குறைந்தபட்சம் 110 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்ச விலையான ரூ.136 என்று பார்த்தால், ஒரு லாட்டுக்கு ரூ.14,960 தேவைப்படும். தகுதியுள்ள நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.6 தள்ளுபடியும் உண்டு.

நிறுவனத்தின் நிதிநிலை

2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.33,899 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ.33,029 கோடி. ஆனால், வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.10,825 கோடியிலிருந்து ரூ.10,698 கோடியாகக் குறைந்துள்ளது.

ஒடிசாவில் நிலக்கரிச் சுரங்கங்களை இயக்கும் இந்த நிறுவனம், கோல் இந்தியாவின் முழுமையான துணை நிறுவனம். தல்சேர், ஐப் வேலி பகுதிகளில் நிலக்கரியை உற்பத்தி செய்து, மின் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களுக்கு வழங்கி வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel