உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவார்கள்.
இந்த நிலையில் காலை, மாலை இரண்டு வேளைகளில் எந்த நேர உடற்பயிற்சி இதற்கு உதவி செய்யும் என்பது பற்றி விளக்குகிறார்கள் பிஸியோதெரபிஸ்ட்ஸ்.
“காலையில் உடற்பயிற்சி செய்பவர்களால் இரவு தூங்கி எழுந்து முழு ஆற்றலுடன் உடற்பயிற்சி செய்ய முடியும். காலையில் உடற்பயிற்சி செய்யும்போது அவர்களின் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் காலையிலிருந்து தங்கள் ஆற்றலை பல்வேறு விஷயங்களுக்குச் செலவழித்து சோர்வாகி இருப்பார்கள். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, முழு ஆற்றலுடன் ஈடுபட முடியாது.
இவர்களுக்கான நன்மை என்னவென்றால் பகல் முழுவதும் இயங்கிருப்பார்கள் என்பதால், மூட்டுகள் எல்லாம் அசைந்து இருக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ஜிம் செல்பவர்களுக்கு காலையா, மாலையா, இரவா என்ற பிரச்னை இல்லை. காரணம், அவர்கள் அறைக்குள்தான் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து கிடைக்கும். ஆனால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால்தான் எடை குறையும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்களும் இல்லை.
காலையோ மாலையோ உடற்பயிற்சி செய்வது அவசியம் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
திறந்தவெளியில், பார்க்கில் நாமாக உடற்பயிற்சி செய்யும்போது ஃபிரெஷ்ஷான சூழலை அனுபவிக்க முடியும். இதனால் உளவியல்ரீதியாக நல்ல மனநிலையைப் பெற முடியும்.
இந்த நிலையில், எங்கு, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம் என்பது முக்கியமில்லை. முறையான நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி, டயட் இரண்டையும் பின்பற்றினாலே எடை குறையும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் குடைச்சல்… தனித்தே போட்டியிடணும்! பெருகும் திமுக நிர்வாகிகள் குரல்!
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் இணைக்கப்படும் தனியார் மருத்துவமனைகள்!