இன்னைக்கு சாயங்காலம் டீக்கடைக்கு போனா, ’அமெரிக்க போன முதல்வரு ஒரு செல்பி எடுத்து போடலேயே’னு பீல் பண்ணிட்டு இருந்தாப்ல நண்பர்.
வரும் வரும்… வெயிட் பன்னுயானு சொல்லிட்டு வந்தேன். நைட்டு 9 மணியாப்ல போன் பண்ணி ’யோவ் தலைவரு சான்பிரான்சிஸ்கோல வாக்கிங் போயிட்டு இருக்காரு’னு ஜிம் ட்ரெட்மில்ல நடக்குற போட்டோவ அனுப்புனான்.
சரியா… நைட்டு புல்லா போட்டோ வந்துட்டே இருக்கும்.. போய் தூங்குயானு சொன்னேன்.
அதுக்கு அவன், ’அது வரட்டும்… இப்போ நான் நடக்கனும் கூட வார்ரீயா?’னு கேட்குறான்.
”பகல பைக்ல போனாலே நாய் கடிக்குது… இதுல நைட்டு வேறயா”னு போன கட் பண்ணிட்டு தூங்க வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்! ~ செய்தி
தரிசனத்துக்கே ஆதார் கட்டாயம்தான், தரிசனம் பண்ணிட்டு லட்டு கவுண்டர் போறதுக்குள்ள ஆதார்ல எதாவது மாறிருமா என்ன..?
கிச்சா
அண்ணே டக்குனு ஒரு பத்து திருக்குறள் சொல்லுங்கண்ணே…
டக்குனு பத்து பொய் வேணா சொல்லுறேன்.. திருக்குறள் எல்லாம் சொல்லத் தெரியாது
Kirachand
10 ஆண்டுகளில் 53 கோடி வங்கிக் கணக்குகள்! -மோடிஜி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்ட எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!
balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க ?
படிச்ச 20000 புக்குல ஒன்னு கூடவா சர்வதேச அரசியல் பற்றி இல்ல எதுக்கு லண்டன்னு கேக்குறாம்ப்பா
mohanram.ko
20 கோடி ரூபாயை 300 நாள்ல எப்படி செலவு பண்ண அருணாச்சலம்?
சிவாஜி சிலை வச்சிருவோம்
குருநாதா
கடன் குடுத்தா பணம் மட்டுமல்ல நட்பும் போயிடும்
குடுக்கலனா?
நட்பு மட்டும் போயிடும்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
”தலைவருடன் நடிக்க காத்திருக்கிறேன்” : நாகார்ஜூனா ஹேப்பி!
பேராசிரியர்கள் முறைகேடு ஆட்சி திறனின்மையை காட்டுகிறது : சீமான் குற்றச்சாட்டு!