டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today november 6 2023

ஆர்எஸ்எஸ் பேரணி – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 6) உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. top ten news November 6 2023

ADVERTISEMENT

ஐடி சோதனை!

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

ADVERTISEMENT

மத்திய பிரேதசத்தில் பிரியங்கா காந்தி!

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரேதசத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

ADVERTISEMENT

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுக லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

காய்ச்சல் முகாம்!

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 534வது நாளாக பெட்ரொல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’கமல் 234’ தலைப்பு!

நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள ‘KH 234’ படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

பாபி சிம்ஹா பிறந்தநாள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் 41வது பிறந்தநாள் இன்று.

ஐசிசி உலகக் கோப்பை! top ten news November 6 2023

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 38வது லீக் போட்டியில் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் மோத உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Bigg Boss 7 Day 35: இனி ஓப்பன் நாமினேஷனுக்கு தடை… கமல் வைத்த புது செக்!

ஜாதியும், நீதியும்: பன்மைத்துவத்தை மறுக்கும் பாஜக அரசியல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share